அயோத்தி நகரை முழு சோலார் நகராக மாற்ற உத்தர் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
அயோத்தி நகரை முழு சோலார் நகராக மாற்ற உத்தர் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
ராமர் கோவில் கட்டப்பட்டுவரும் அயோத்தியா நகர் முழுவதுமாக சூரிய ஒளியைக்கொண்டு இயக்கப்படும் நகராக மாற்ற உத்தர பிரதேச அரசு முடிவுசெய்துள்ளது.
அயோத்தியா நகரில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவிலின் மின் தேவைகளுக்காகவும், கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கான சமுதாய சமையலறை எனக் கோவிலின் மின் தேவைகள் அனைத்தும் சூரிய ஒளிக்கொண்டு இயக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கு சூரிய ஒளி கொண்டு மின் உற்பத்தி செய்யப்படும் தகடுகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் மின் தகடுகளை பொருத்துபவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.