நகைக்கடை கொள்ளை ; வாடிக்கையாளர் சுட்டுக்கொலை.!

நகைக்கடை கொள்ளை ; வாடிக்கையாளர் சுட்டுக்கொலை.!
நகைக்கடை கொள்ளை ; வாடிக்கையாளர் சுட்டுக்கொலை.!

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வாடிக்கையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வாடிக்கையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் வித்யாரண்யபுரம் என்ற பகுதியில் அம்ருத் என்ற நகைக்கடை உள்ளது.  அங்கு மூன்று கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி அங்கிருந்த நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். 

இந்நிலையில் திருடன் திருடன் எனக் கத்திக்கொண்டே திருடர்களை கொள்ளையடிப்பதிலிருந்து தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது திருடர்களின் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கடையின் உரிமையாளரை நோக்கி சுடமுயன்றுள்ளான். அப்போது அக்கடையின் உரிமையாளர் தன்னைக் காத்துக்கொள்ள தரையில் படுத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு பாதி மூடப்பட்டிருந்த ஷட்டரை திறந்து உள்ளே வந்த இளைஞர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் அந்த திருடர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் தடுக்க முயற்சித்தபோது, துப்பாக்கியை காட்டி மிரட்டி பைக்கில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கு போலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com