தேசியம்
அனைத்துக் கட்சி கூட்டம்: முறைப்படி மத்திய அரசு அழைப்பு!
அனைத்துக் கட்சி கூட்டம்: முறைப்படி மத்திய அரசு அழைப்பு!
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்க வரும் 26ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெறும் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு, ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கவிருந்த நிலையில், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் மோடி வெளியுறவுத்துறைக்கு அறிவுறுத்தியப்படி, இக்கூட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை முறைப்படி அழைப்பு விடுத்து, விரிவான விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடதக்கது