வரதட்சணை கொடுமைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: கேரள முதல்வர் எச்சரிக்கை!

வரதட்சணை கொடுமைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: கேரள முதல்வர் எச்சரிக்கை!

வரதட்சணை கொடுமைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா உயிரிழப்புக்கு பிறகு கேரளாவில் வரதட்சணை முறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கான வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வருகிறது.இது  குறித்து கேரளா சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பபட்டது.அதற்கு, வரதட்சணை வழக்குகளில் கடும் தண்டனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பினராயி விஜயன் தெரிவித்தார். 

தற்போது இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்,வரதட்சணை கொடுமைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.மேலும் காந்திய வழியில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் கேரளா ஆளுநர் உண்ணாவிரதம் மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்