ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு விவரம் இதோ..!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 9 நாட்கள் மூடப்படும். எனவே எந்தவொரு முக்கியமான தேவைக்காக வங்கி செல்வதற்கு முன்பு வங்கி விடுமுறைகளின் பட்டியலை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். 

ரிசர்வ் வங்கியின் காலண்டரின் படி, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் என ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 9 விடுமுறைகள் உள்ளன. இது தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வங்கி விடுமுறைகள் வேறுபடுகின்றன. அனைத்து விடுமுறை நாட்களையும் அனைத்து வங்கி நிறுவனங்களும் கடைபிடிக்கவில்லை. வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும் சார்ந்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக்கிழமை, அதாவது அடுத்த மாதத்தின் முதல் நாளில் வங்கிகள் மூடப்படும். இரண்டாவது சனி, நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர, ஆகஸ்ட் மாதத்தில் 9 விடுமுறைகள் உள்ளன. ஆகஸ்ட் 15, 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தினத்தின் காரணமாக விடுமுறை தினமாக இருக்கும்.

இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது 

ஆகஸ்ட் 1 - ஞாயிறு

ஆகஸ்ட் 8 - ஞாயிறு 

ஆகஸ்ட் 14 - இரண்டாவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 15 - ஞாயிறு 

ஆகஸ்ட் 20 - மொகரம்

ஆகஸ்ட் 22 - ஞாயிறு 

ஆகஸ்ட் - 28 நான்காவது சனிக்கிழமை

ஆகஸ்ட் - 29 ஞாயிறு 

ஆகஸ்ட்  30 - கிருஷ்ண ஜெயந்தி

Find Us Hereஇங்கே தேடவும்