3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களுடன் ஜொலிக்கும் சாய்பாபா!

3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களுடன் ஜொலிக்கும் சாய்பாபா!

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு பொருட்களை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும்  சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்.இந்த சம்பவம் மக்களிடத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்