பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்து: 18 பேர் பரிதாபமக உயிரிழப்பு

பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்து: 18 பேர் பரிதாபமக உயிரிழப்பு

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ-அயோத்யா தேசிய நெடுஞ்சாலை பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.இந்நிலையில் பேருந்தின் முன்புறம் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம் வேகமாக வந்த லாரி திடீரென நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் உறங்கி கொண்டு இருந்த தொழிலாளர்கள் 18 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்