காலில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர் இவர் தானா!?

காலில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர் இவர் தானா!?

இரு கைகளும் இல்லாத மாற்று திறனாளியான இளைஞர் பிரணவ் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிரணவுக்கு இரண்டு கைகளும் கிடையாது .பிரணவ் 2019 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது  வாக்கு இயந்திரத்தில் கால்களால் வாக்கு செலுத்தி அசத்தினார் . அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரணவ் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்ததுடன் தனது கால்களின் துணையுடன்,முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டதால் பிரணவ் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இந்நிலையில் ஆலத்தூர் பகுதியில் காலில் கோவிஷீல்டு தடுப்பூசியை  செலுத்திக்கொண்டார்.காலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்