பெண் வேடமிட்டு மாணவியை ஏமாற்றிய இளைஞர்

பெண் வேடமிட்டு மாணவியை ஏமாற்றிய இளைஞர்..!

பெண் வேடமிட்ட ஆன் லைன் நண்பரால் பெண் ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஆன்லைனில் "வெளிகே" என்ற ஆப் மூலம் ராஜீவ் கார்க் என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் தன்னை பெண் என்று கூறிக்கொண்டு பெண் வேடமிட்ட போட்டோவை ஆன்லைனில் டிபியாக வைத்து அந்த பெண்ணை ஏமாற்றி இருக்கிறார்.

அந்த மாணவியும், அவரை ஒரு பெண்ணென்று நம்பி தினமும் ஆன்லைனில் அரட்டையடித்து வந்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரின் அழைப்பின் பேரில் அவர் வீட்டை வீட்டு அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார். 

அப்போது அந்த பெண் வேடமிட்ட கார்க், அந்த பெண்ணை வேறு சிலருடன் சேர்ந்து ஒரு காரில் கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு ராம் மோகன் என்ற நபருக்கு ரூ.50,000க்கு விற்று விட்டு தப்பிச் சென்றுவிட்டார். 

அந்த பெண் அந்த நபரால் இரண்டு மாதங்கள் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். 

போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், அந்த பெண் டெல்லியில் ஒரு இடத்தில் இருப்பதை கண்டு பிடித்து அந்த இடத்துக்கு சென்று அந்த பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Find Us Hereஇங்கே தேடவும்