புது மனைவியை கட்டிவைத்து சித்ரவதை செய்த என்ஜினீயர்

புது மனைவியை கட்டிவைத்து சித்ரவதை செய்த என்ஜினீயர்..!
கேரளாவில் 31 வயது பெண் ஒருவர், திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணியாற்றிய 31 வயது ஆண் மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அவருக்கு திருமணத்தின்போது 50 சவரன் நகைகளை வரதட்சணையாக அவரது தந்தை கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த பெண்ணை அவரது கணவரும், மாமியாரும் 50 சவரன் தங்க நகைகளை வீடு வாங்குவதற்காக கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண் தர மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அந்த பெண்ணை கணவரும், மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கி அவருக்கு சாப்பாடு கொடுக்காமல் பல நாட்களாக பட்டினியாக போட்டுள்ளனர். 

எப்படியோ அந்த பெண் அங்கிருந்து தப்பி, தனது தந்தை வீட்டுக்கு சென்று தனக்கு நேரிட்ட கொடுமையை கூறியிருக்கிறார். உடனடியாக அவர் மருமகனை சந்தித்து அந்த பெண்ணின் தந்தை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், அவரையும் அவர் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தந்தையும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவரின் கொடுமை தாங்காமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

Find Us Hereஇங்கே தேடவும்