குழந்தைகளை விற்று பணம் சம்பாதித்த பலே டாக்டர்..!

கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்களின் குழந்தைகளை விற்ற பலே டாக்டர்..!

கல்யாணம் ஆகாத பெண்களுக்கு பிறக்கும் பல குழந்தையை விற்று பணம் ஈட்டிய டாக்டர் கைது செய்யப்பட்டார். 

மத்தியபிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் 16 வயது பெண் ஒருவர், டாக்டர் ரேணு சோனி என்பவரின் கிளினிக்கில் கல்யாணம் ஆகாமல் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இந்த குழந்தையை அந்த பெண்ணின் குடும்பத்தினர் யாரிடமாவது கொடுத்து வளர்க்குமாறு டாக்டரிம் கூறியிருக்கிறார்கள். அந்த டாக்டரும் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து அந்த குழந்தையை வளர்க்க சொல்லி இருக்கிறார். 

இதையடுத்து, அந்த டாக்டரும் அந்த செவிலியரும் அந்த குழந்தையை குழந்தையில்லாத தம்பதிகளுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு விற்பதற்காக பேரம் பேசியிருக்கிறார்கள். இவ்வாறு பல கல்யாணம் ஆகாத பெண்களுக்கு பிறக்கும் பல குழந்தையை விற்றுள்ளார்கள். 

இந்த தகவலை அறிந்து கொண்ட அந்த குழந்தையின் தாய், குழந்தையை கேட்டு டாக்டரிடம் சென்றபோது, குழந்தையை தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அந்த பெண் உடனடியாக போலீசில் புகார் கொடுக்க போலீசார் கிளினிக்கில் சோதனை நடத்தினார்கள். 

அப்போது, பல குழந்தைகளை அவர் விற்ற பகீர் தகவல் வெளியானது. அவருக்கு சொந்தமான கிளினிக் மற்றும் மெடிக்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்