யாரும் எந்த வித போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் - பரபரப்பை ஏற்படுத்தும் எடியூரப்பா ட்வீட்

யாரும் எந்த வித போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் - பரபரப்பை ஏற்படுத்தும் எடியூரப்பா ட்வீட்

கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பா.ஜனதாவினர் எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால் அவருக்கு பதிலாக மாற்று தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 16-ந் தேதி டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, 75 வயது தாண்டிவிட்டதால், நீங்கள் பதவி விலக வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு மேலிட தலைவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுத்த எடியூரப்பா வருகிற 26-ம் தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டப்பட்டுகிறது. அந்த கூட்டத்தில் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், " பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 எடியூரப்பாவின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்