தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை தனியுரிமைக் கொள்கையை நிறுத்தி வைப்போம்
தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, தனியுரிமைக் கொள்கையை நிறுத்தி வைப்போம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஐகோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "புதிய 'பிரைவசி' கொள்கையை நாங்களாகவே நிறுத்தி வைக்கிறோம். இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை நிர்பந்திக்க மாட்டோம். தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை தனியுரிமைக் கொள்கையை நிறுத்தி வைப்போம்" என வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே தெரிவித்துள்ளார்.
முன்னதாக "நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும். பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம் என வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.