சொன்னதை செய்து காட்டிய சோனு சூட்: குவியும் பாராட்டுகள்!

சொன்னதை செய்து காட்டிய சோனு சூட்: குவியும் பாராட்டுகள்!
சொன்னதை செய்து காட்டிய சோனு சூட்: குவியும் பாராட்டுகள்!

கொரோனா தொற்று தொடங்கியதும் மக்களுக்காக சேவை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் சோனு சூட்.

கொரோனா தொற்று  தொடங்கியதும் மக்களுக்காக சேவை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் சோனு சூட். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் சோனு சூட்.மேலும் இவர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்களது சொந்த ஊர் செல்ல சொந்த செலவில் ஏற்பாடுகளை செய்தார் .

சோனு சூட் அறக்கட்டளையில் தனது குழுவுடன் சேர்ந்து மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற மருத்துவ வசதிகளை  செய்து வருகிறார்.இப்போது, ​​வாக்குறுதியளித்தபடி, முதல் ஆக்ஸிஜன் ஆலையை நெல்லூரில் வெற்றிகரமாக நிறுவியுள்ளார்.இதை அந்த ஊர் மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடைய புகைப்படங்களில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்,அந்த பதிவில் ,உங்களுடைய இந்த அன்பான வரவேற்புக்கு நன்றி. நாங்கள் அனுப்பிய ஆக்ஸிஜன் பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்று நான் நம்புகிறேன்.மற்ற மாநிலங்களும் இதை பின்தொடர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி அவர் முன்பு ஒருநாள் கூறும்போது,எல்லா மாநிலங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ முயற்சி செய்தேன். 150-200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும். தற்போது ஆந்திராவின் இரு பகுதிகளில் நிறுவப்படுகிறது. இந்த மாத இறுதியிலிருந்து இப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும். 16 மாநிலங்களில் செப்டம்பரில் இப்பணிகள் நிறைவுபெறும்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இனி ஏற்படாது. சிலநேரங்களில் நீண்ட தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலைமை நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. சிலசமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதன்மூலம் அப்படியொரு நிலைமை இனி ஏற்படாது என நம்புகிறேன். இந்தியா முழுக்க 700 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளோம். ஆனால் அது தற்காலிக ஏற்பாடு தான். ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளால் யாருக்கும் இனி பிரச்னை ஏற்படாது. எதற்காக 3-வது, 4-வது அலை தொடங்கும்வரை காத்திருக்க வேண்டும்? கொரோனா பாதிப்பு முடிவடைந்தாலும் கிராமங்களிலும் பக்கத்து மாவட்டங்களிலும் எப்போதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்று  கூறினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com