ஓரு சிறுவன் ஒருவர் மாஸ்க் அணியாதவர்களை மாஸ்க் அணிந்து கொள்ளுமாறு கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓரு சிறுவன் ஒருவர் மாஸ்க் அணியாதவர்களை மாஸ்க் அணிந்து கொள்ளுமாறு கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அனைவரும் மாஸ்க் போட வேண்டும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பலூன் விற்கும் சிறுவன் ஒருவர் வலியுறுத்தி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தர்மசாலாவின் பாக்சுனாக் எனும் சுற்றுலா தலத்தின் கடைவீதியில் 5 வயது சிறுவன் ஒருவன் கையில் பலூனை வைத்துக்கொண்டு முக கவசம் அணியாமல் செல்பவர்கள் இடம் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு கூறும் வீடியோ பார்ப்பவரை சிந்திக்க வைக்கிறது. இந்த சிறுவனின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. வீடியோவில் பார்க்கும் போது அந்த சிறுவனிடம் அணிய செருப்பு கூட இல்லை.ஆனால் அவனின் இந்த சமூக அக்கறை மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.