புதிதாக கிளம்பிய ஜிகா வைரஸ்: பீதியில் மக்கள்!

புதிதாக கிளம்பிய ஜிகா வைரஸ்: பீதியில் மக்கள்!
புதிதாக கிளம்பிய ஜிகா வைரஸ்: பீதியில் மக்கள்!

கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பராச்சாலா என்னும் பகுதியில் உள்ள ஒரு 24 வயதுப் பெண் ஜிகா வைரஸால் பாதிக்கபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது .

கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பராச்சாலா என்னும் பகுதியில் உள்ள ஒரு 24 வயதுப் பெண் ஜிகா வைரஸால் பாதிக்கபட்டிருப்பது              கண்டறியப்பட்டுள்ளது .

கொரோனா வைரஸின் பரவல் குறையாத நிலையில் தற்போது புதிதாக ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது.அந்த பெண்மணி ஜூலை 7 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால் தற்போது அவருடைய உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.அவருடைய வீடு தமிழக எல்லையில் அமைந்துள்ளது.ஒரு வாரம் முன்பு அவருடைய தாயுக்கும் இந்த அறிகுறிகள் இருந்துள்ளன.

இது குறித்து தகவல் அளித்த கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ்,  இது போல இன்னும் சில பேருக்கு அறிகுறிகள் இருந்ததால் 13 மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்று நோய் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com