பாகிஸ்தான் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆதாரம் வெளியீடு...

பாகிஸ்தான் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆதாரம் வெளியீடு...

பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆதாரத்தை இந்தியா வெளியிட்டது.

பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆதாரத்தை இந்தியா வெளியிட்டது.

இந்தியாவுக்குள் நுழைந்து வீரர்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் 350 தீவிரவாதிகள் இறந்தனர்.

அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால் அதை பாகிஸ்தான் மறுத்தது.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து வெயிாகும் பாரின் பாலிசி  என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப் 16 ரக விமானங்கள் உள்ளது என்பதை என்னி பார்த்ததாகவும், எண்ணிக்கை குறையவில்லை என்றும் செய்தி வெளியிட்டது.

இந்தநிலையில் பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவு ஆதாரங்களை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி. கபூர் காட்சிப்படுத்தினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com