பெற்ற தாயின் உயிரை காப்பாற்றிய 2 வயது பெண் குழந்தை.!
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 2 வயது பெண் குழந்தை தனது தாயின் உயிரை காப்பாற்ற உதவிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் ரயில்வே நிலைய பிளாட்பாரத்தில் 6 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவரது 2 வயது பெண் குழந்தை அருகில் உள்ள பெண் போலீசாரை நோக்கி ஓடி தனது தாயையும் தம்பியையும் காப்பாற்றுமாறு கூறியுள்ளது. உடனே அப்பெண்ணிடம் சென்று முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர் பெண் போலீசார். ஆனால், அப்பெண் எழுந்திருக்கவில்லை.
எனவே, ஆம்புலன்ஸை அழைத்து உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர் காவல்துறையினர்.சமயோஜிதமாக செயல்பட்டு போலீசாரை உதவிக்கு அழைத்துவந்த அந்த 2 வயது பெண் குழந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.