’தமிழ்நாட்டிடம் அனுமதிலாம் கேட்கத் தேவையில்லை’ - கர்நாடக காங்., தலைவர் அதிரடி..!

’தமிழ்நாட்டிடம் அனுமதிலாம் கேட்கத் தேவையில்லை’ - கர்நாடக காங்., தலைவர் அதிரடி..!
’தமிழ்நாட்டிடம் அனுமதிலாம் கேட்கத் தேவையில்லை’ - கர்நாடக காங்., தலைவர் அதிரடி..!

’தமிழ்நாட்டிடம் அனுமதிலாம் கேட்கத் தேவையில்லை’ - கர்நாடக காங்., தலைவர் அதிரடி..!

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதில் கடிதம் அனுப்பினார். அதில், தமிழ்நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “ஒரு மாநிலமானது தனது திட்டங்களுக்கு மற்றொரு மாநிலத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது. ஆகவே,  கர்நாடக முதலமைச்சர், தமிழக முதலமைச்சரிடம்  அனுமதி கோருவது அரசியல் விருப்பமின்மை” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,மேகதாது திட்டத்திற்கான டெண்டர்கள் விடும் பணிகளை தொடங்கினோம் என்று தெரிவித்த சிவக்குமார், “ஏன் அதே செயல்முறையைத் தொடரவும், டெண்டர்களை வழங்கவும் முடியவில்லை?”  எனவும் கர்நாடக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com