அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் போது கத்தரிக்கோல் வர தாமதமானதால் கையால் கிழித்த சம்பவம்! டென்ஷன் ஆன முதல்வர்..

அரசு திட்டங்களை தொடங்கிவைக்கும் போது ரிப்பன் வெட்ட கத்திரிகோல் கொடுக்க தாமதம் ஆனதால் தெலங்கானா முதல்வர் ரிப்பனை கைகளாலேயே கிழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அரசு திட்டங்களை தொடங்கிவைக்கும் போது ரிப்பன் வெட்ட கத்திரிகோல் கொடுக்க தாமதம் ஆனதால்  தெலங்கானா முதல்வர் ரிப்பனை கைகளாலேயே கிழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக இரட்டை படுக்கையறை கொண்ட வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவுப் பெற்று சிர்சிலாவில் வீடுகளை பயனாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்த நிலையில், ரிப்பனை வெட்டுவதற்கான கத்திரிகோல் வழங்குவதற்கு அதிகாரிகள் மறந்து விட்டனர்.அதை எடுத்து வருவதற்கும் தாமதமானதால், பொறுமை இழந்த முதல்வர் சந்திரசேகர ராவ், ரிப்பனை வெறும் கைகளால் கிழித்து விட்டு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்குள் சென்றார்.இது தொடர்பான வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  நெட்டிசன்கள் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com