அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது...
அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வங்கியின் செயல்பாட்டை சந்தேகப்படும் வகையில் பேசியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு அடுத்த மே மாதம் 27ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவர்கள் இருவருக்கும், அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.