பிரிட்டனில் இருந்து நாடு கடத்த தடை விதிக்கக் கோரிய விஜய் மல்லையாவின் கோரிக்கையை, லண்டம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து நாடு கடத்த தடை விதிக்கக் கோரிய விஜய் மல்லையாவின் கோரிக்கையை, லண்டம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அந்த பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டி, பிரிட்டனில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தலாம் என கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, விஜய் மல்லையா, பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.