ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மட்டும் ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 50 சதவீத வாக்குகளை சரிபார்க்க வேண்டும் என்றால் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடுதலாக 6 நாட்கள் தேவைப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.