தேசியம்
மன்மோகன் சிங்கை விட மோடியின் விமான செலவு குறைவு!
மன்மோகன் சிங்கை விட மோடியின் விமான செலவு குறைவு!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான எண்ணிக்கை மற்றும் அதற்கான செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கான எண்ணிக்கை மற்றும் அதற்கான செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்த ஐந்து ஆண்டுகளில், ஏர் இந்தியா விமானம் மூலம் ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 44 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கான விமானச் செலவு ரூ.443.4 கோடி என ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதே போல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவி வகித்த ஆட்சி காலத்தில் (2009-2014) 38 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான செலவு ரூ.493.22 கோடி எனவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங்கை விட பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.