வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது.
48 பக்கங்களில் 12 துணைத் தலைப்புகளில் 75 வாக்குறுதிகள் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கையை, டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்று இன்று வெளியிட்டனர்.
முக்கிய அம்சம்கள்!
•தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்ட திட்டம்.
•புதிய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்
•அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்க திட்டம்
•ஆதாருடன் அனைத்து நிலப் பத்திரங்களும் இணைக்கப்பட்டு, கணினி மயமாக்க திட்டம்.
•சட்டம், பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட கல்வியிடங்களின் எண்ணிக்கை மேலும் 50% அதிகரிக்க திட்டம்
•நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்.
•2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
•2024ஆம் ஆண்டுக்குள் 200 கேந்திரிய, நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
•கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என அறிவிப்பு.
•உலக அளவில் யோகா கொண்டு செல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.