48 பக்கங்களில் 75 வாக்குறுதிகள்! பாஜக தேர்தல் அறிக்கை!!

48 பக்கங்களில் 75 வாக்குறுதிகள்! பாஜக தேர்தல் அறிக்கை!!
48 பக்கங்களில் 75 வாக்குறுதிகள்! பாஜக தேர்தல் அறிக்கை!!

48 பக்கங்களில் 12 துணைத் தலைப்புகளில் 75 வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

48 பக்கங்களில் 12 துணைத் தலைப்புகளில் 75 வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

 • வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கு ரூ.25 லட்சம் கோடி முதலீடு.
 • உட்கட்டமைப்புத் துறைக்காக ரூ.100 லட்சம் கோடி முதலீடு.
 • ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்படும்.
 • தீவிரவாதத்துக்கு எதிராக சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்ற முடிவு.
 • ராணுவத்துக்கு தேவையான அதி நவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவு படுத்த திட்டம்.
 • மத்திய ஆயுத போலீஸ் படைகள் மேலும் நவீனப்படுத்தப்படும் என்றும் திறன் அதிகரிக்கப்படும் எனவும் உறுதி
 • வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடிபெயர்வது தடுப்பது குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
 • 2024ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி மூலதன முதலீடுகள் செய்ய திட்டம்
 • எல்லைகளில் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும்.
 • எல்லையோரப் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்த திட்டம்
 • நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்
 • சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த முடிவு.
 • வட்டியில்லா கிசான் கிரிடிட் கார்டு திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா விவசாய கடன் வழங்கப்படும்
 • விவசாயத் துறையில் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு, வேளாண் மற்றும் ஊரகத் துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்
 • சிறு வணிகர்களுக்காக தேசிய வர்த்தகங்கள் நல வாரியம் அமைக்க முடிவு
 • சில்லறை வர்த்தகத்துக்கான தேசிய கொள்கை வகுக்க திட்டம்.
 • 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதி.
 • அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வகையில், அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வழிவகைகளும் ஆராய்ந்து விரிவுபடுத்தப்படும்
போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com