அரசியல் தொடர்பாக பதிவிட்டவரின் வீட்டிற்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள்!

அரசியல் தொடர்பாக பதிவிட்டவரின் வீட்டிற்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள்!

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் தொடர்பாக ஒரு பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் போலி செய்திகள் பரவுவதை தடுக்க அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசியல் விளம்பரங்கள் அளிப்பதில் பேஸ்புக் நிறுவனம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் தொடர்பாக ஒரு பதிவிட்டுள்ளார். உடனே அவரது வீட்டிற்கு விரைந்த பேஸ்புக் அதிகாரிகள், ஆதார் அட்டையை வைத்து அந்தப் பதிவை எழுதியது சம்பந்தப்பட்ட நபர் என்பதை தெரிந்து கொண்டுள்ளனர். ஒரு பதிவுக்காக பேஸ்புக் அதிகாரிகள் வீடு தேடி வந்து சோதனை நடத்தியது சமூக வலைத்தள வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த நபர், ‘நான் மட்டும் தான் அரசியல் பதிவு போடுகிறேனா? இதற்காக அதிகாரிகள் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தியது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். இவ்வாறு சோதனை நடத்துவதால், சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் பிரைவசி கேள்விக்குறியாகி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com