தன்னைக் கடித்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு ட்ரீட்மெண்ட்க்கு சென்ற இளைஞன்: மிரண்டுபோன மருத்துவர்கள்

தன்னைக் கடித்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு ட்ரீட்மெண்ட்க்கு சென்ற இளைஞன்: மிரண்டுபோன மருத்துவர்கள்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்போடு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் கம்புலி தாலுகா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார்.அப்போது அங்கிருந்த புதரிலிருந்து ஒரு பாம்பு இவரை கடித்துள்ளது. பின்னர் அந்த பாம்பை கையில் பிடித்த இளைஞன் அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஒரு இளைஞர் கையில் பாம்புடன் வருவதை பார்த்து பயந்து போய் விட்டனர்.

மேலும் மருத்துவரிடம் சென்று இந்த பாம்புகள் தன்னைக் கடித்ததாகவும், தனக்கு சிகிச்சை அளிக்கும் படியும் கூறியுள்ளார்.
சிகிச்சை அளித்து முடிக்கும் வரை அந்த பாம்பை இளைஞர் கீழே விழாமல் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார். இது குறித்து அந்த இளைஞரிடம்  கேட்டதற்கு அந்த பாம்பை கீழே விட்டால் அது வேறு யாராவது கடித்து விடும் என்று கூறினார். சிகிச்சைக்குப் பின்பு அங்கிருந்து சென்ற இளைஞர் அந்த பாம்பை வனப்பகுதியில் சென்று விட்டார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்