செல்ஃபியால் உயிரிழந்த மருத்துவ மாணவி...!

செல்ஃபியால் உயிரிழந்த மருத்துவ மாணவி...!

மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது செல்ஃபி எடுக்க முயன்ற மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார்.

மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் சிலிக்கான் நகரை சேர்ந்தவர் நேகா அர்ஸ். இவர் சாகர் மருத்துவக் கல்லூரியில்  எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், இவர் இந்தூரில் உள்ள பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தூர் ராஜேந்திர நகர் காவல் நிலையத்தின் அருகில் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து ராஜேந்திர நகர் காவல் நிலையம், “நேகா மற்றும் அவரது சகோதரர் தினமும் இந்த பாலத்தின் வழியாக நடந்து செல்வது வழக்கம். விபத்து நடந்த அன்று அங்கு பலத்த மழை பெய்துள்ளது. மேலும், சகோதரர் அருகில் இருக்கும் கடையில் சிப்ஸ் வாங்க சென்றுள்ளார். அப்போது நேகா பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். சுயக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தண்டவாளத்தின் மீது பல அடிகளை எடுத்து வைத்து கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நேகாவை அருகில் இருக்கும், சோயித்ரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தபோதிலும் இவரை காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்