ரூ.2 கோடிக்கு வாங்கிய நிலம் 5 நிமிடத்தில் ரூ.18.5 கோடிக்கு விற்கப்பட்டதா.? : சர்ச்சையில் ராமர் கோவில் அறக்கட்டளை.

ரூ.2 கோடிக்கு வாங்கிய நிலம் 5 நிமிடத்தில் ரூ.18.5 கோடிக்கு விற்கப்பட்டதா.? : சர்ச்சையில் ராமர் கோவில் அறக்கட்டளை.

அயோத்தியில் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிறுவப்பட்டது. கோவில் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு இந்திய முழுவதும் ராமர் கோவில் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவில் அருகே உள்ள ஒரு நிலம் ரூ. 18.5 கோடிக்கு அறக்கட்டளையால் வாங்கப்பட்டது. தனி நபர் ஒருவரிடம் இருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள அந்த நிலம் 5 நிமிடங்களில் 18.5 கோடி ரூபாய்க்கு அறக்கட்டளையால் வாங்கப்பட்டுள்ள காரணம் என்ன.? இதில் மறைந்துள்ள முறைகேடு என்ன.? மக்களின் நிதியை இப்படி மோசடி செய்கிறார்கள் என்று சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு பதிலளித்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், "சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நிலத்தை வாங்கி உள்ளோம். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை" என தெரிவித்துள்ளது. தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னையை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்