வேலை செய்யாத காண்ட்ராக்டர்: வித்தியாசமான முறையில் பாடம் புகட்டிய எம்எல்ஏ

வேலை செய்யாத காண்ட்ராக்டர்: 
வித்தியாசமான முறையில் பாடம் புகட்டிய எம்எல்ஏ

காண்ட்ராக்டர்
சரியாக வேலை செய்யாத காரணத்தால் கொட்டும் மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து எம்எல்ஏ தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மும்பை மாநகரத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் சாலைகளில் இருந்து வடியாமல் தேங்கி இருக்கிறது.திலீப் லண்டே என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் சன்டிவாளி தொகுதியின் சிவசேனா எம்.எல்.ஏ ஆவார்.

இவர் மழைக்கான பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்த போது, சாலையில் இருந்த குப்பைகள் அகற்றப்படாமல், மழை நீர் வடியாமல் இருந்துள்ளது.

 அப்பகுதியின் துப்புரவு பணிக்கான கான்ட்ராக்டரை நேரில் வரவழைத்த எம்.எல்.ஏ குப்பைகள் அகற்றப்படாமல் மழைநீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, கான்ட்ராக்டரை தேங்கிய மழை நீரில் அமர வைத்து பணியாளரிடம் அருகேயுள்ள குப்பையை கொட்டி  காண்ட்ராக்டர் மீது போட சொன்னார்.

மேலும், பணிகளை சரியாக செய்யாத கான்ட்ராக்டருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் இனி பணிகளை சரியாக செய்வார் என்று திலிப் லண்டே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்