பெற்றோரை இழந்து தவிக்கும் 1,400 குழந்தைகள்..!

கொரோனா எதிரொலி: பெற்றோரை இழந்து தவிக்கும் 1,400 குழந்தைகள்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 1,400 குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலிருந்து, தற்போது வரையிலான இரண்டாவது அலை வரை தொற்று காரணமாக 1,400 குழந்தைகள், தங்கள் தாய், தந்தையில் ஒருவர் அல்லது அவர்களின் பெற்றோரையே இழந்து அனாதையாகியுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது. 

அதில், சென்ற ஆண்டு மட்டும் 50 குழந்தைகளின் பெற்றோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ள சிறுவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021 ஜூன் 5ஆம் தேதிவரை சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் தாய், தந்தையில் ஒருவர் அல்லது பெற்றோரையே இழந்து அனாதையாகியிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதில், 802 மரணங்கள் தமிழகத்தில் மட்டும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்