கொரோனா தடுப்பூசி: அச்சத்தில் வீடுகளை காலி செய்த கிராம மக்கள்..!

கொரோனா தடுப்பூசி: அச்சத்தில் வீடுகளை காலி செய்த கிராம மக்கள்..!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள சம்பகனா கிராமத்தைச் சேர்ந்த காந்த் பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பழங்குடியின கிராம பகுதிகள் அதிகமுள்ள ஒடிசாவில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ குழுவினர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வுவை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த சம்பகனா கிராமத்துக்குச் சென்ற மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இதுகுறித்து பேசிய மருத்துவர் டி.சைலஜா கூறுகையில், "சம்பகனா கிராமத்தில் 'காந்த்' பழங்குடியின மக்கள் மொத்த 500 பேர் வசித்து வருகின்றனர். 

அவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 100 டோஸ்களை எடுத்துச் சென்றோம். ஆனால் நாங்கள் அந்த பகுதிக்கு சென்றபோது, கிராம மக்கள் ஒருவரைகூட இல்லை. அங்கிருந்து 4, 5 கிராம மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அடுத்த 2 மணிநேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்ற தவறான வீடியோ ஒன்று அங்கு பரவலாக பகிரப்பட்டுள்ளது. இந்த தவறான ததவலை நம்பி கிராம மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க வீடுகளை காலி செய்து சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து காந்த் பழங்குடியினத்தின் தலைவரிடம் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை விளக்கி மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மூன்று பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனர்" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்