முதியவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் தடுப்பூசி - ஆந்திர அரசு முடிவு

முதியவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் தடுப்பூசி -  ஆந்திர அரசு முடிவு

ஆதார் அட்டை இல்லாத முதியோர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 கொரோனா வைரஸ் மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி, கருப்பு பூஞ்சை, மூன்றாம் அலை ஆகியவை குறித்த முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆந்திர மாநிலத்தால் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பதில் மனுவில், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும், புதிதாக 26,325 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்வதன் மூலம் மூன்றாம் அலையை திறமையாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா மூன்றாம் அலையில் அதிக அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆதார் அட்டை இல்லாத முதியவர்களுக்கு கூட கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாகவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்