சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து: அதிரடி நடவடிக்கை எடுத்த பிரதமர்.

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து: அதிரடி நடவடிக்கை எடுத்த பிரதமர்.
சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து: அதிரடி நடவடிக்கை எடுத்த பிரதமர்.

இந்தியா முழுவதும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு +2 பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது பற்றி பலகட்டங்களாக ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அதன்பின் இந்தாண்டு நாடு முழுவதும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கான மதிப்பெண்கள் குறிப்பிட்ட கால அளவில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வழிமுறையில் வெளியிடப்படும். மாணவர்களின் உடல் நலன் முக்கியம் என்பதால் வேறு எதிலும் சமரசம் இல்லை. மாணவர்களின் உடல்நலம் பாதுகாப்பு முக்கியம் என்பதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. மேலும், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு உகந்த சூழல் ஏற்பட்டவுடன் வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com