2DG மருந்தை யாருக்கெல்லாம் தர வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG மருந்தை கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தரக்கூடாது என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. யாருக்கெல்லாம் தர வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் கருவுற்ற பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள், மாரடைப்பு, கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் 2DG மருந்து தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிதமான மற்றும் தீவிர பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை மட்டுமே வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.