திருமண நாளை இப்படிலாம் கொண்டாடுவாங்களா?

திருமண நாளை இப்படிலாம் கொண்டாடுவாங்களா? மணப்பெண் மீது வழக்கு..!
திருமண நாளை இப்படிலாம் கொண்டாடுவாங்களா?

மணப்பெண் ஒருவர், தனது திருமண நாளன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வழக்குப்பதிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மணப்பெண் ஒருவர், தனது திருமண நாளன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்தை பலர் வித்தியாசமான முறையில் கொண்டாடும் வேண்டும் என்பதற்காக விமானங்களில் திருமணம் நடத்துவது, ஆழ்கடலில் திருமணம் நடத்துவது என பல முறைகளில் தங்கள் திருமணத்தை விசேஷப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்மணி ஒருவர், தனது திருமண நாள் அன்று துப்பாக்கி சத்தத்தை ஒலிக்க செய்து கொண்டாடியுள்ளார்.

ஜெத்வாரா பகுதியைச் சேர்ந்த ரூபா பாண்டே என்ற பெண், அவரது மாமா ராம்வாஸ் பாண்டே என்பவருக்கு சொந்தமான உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து, தனது திருமண நாள் அன்று துப்பாக்கி சத்தத்தை ஒலிக்க செய்து திருமண நாளை கொண்டாடியுள்ளார். 

அந்த பெண்மணி, துப்பாக்கியை வைத்து காற்றில் சுட்டதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com