கொரோனா தடுப்பூசி போட்டேன் ஆனால் எதிர்ப்பு சக்தி கிடைக்கல

கொரோனா தடுப்பூசி போட்டேன் ஆனால் எதிர்ப்பு சக்தி கிடைக்கல.. அதிரடியாக போலீஸில் புகார் அளித்த இளைஞர்..!
கொரோனா தடுப்பூசி போட்டேன் ஆனால் எதிர்ப்பு சக்தி கிடைக்கல

தனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை என்று இளைஞர் ஒருவர் போலீசில் புகார்

கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகும் தனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை என்று இளைஞர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆஷியானா பகுதியைச் சேர்ந்த பிரதாப் சந்திரா என்ற இளைஞர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ஆஷியானா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை செலுத்திக் கொண்டார். 

பின்னர் 2வது டோஸ் 28 நாட்களுக்கு பிறகு செலுத்திக் கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 2வது டோசுக்கான கால இடைவெளி நீட்டிக்கப்பட்டிருப்பதால் அவர் ஊசி செலுத்திக்கொள்ள காத்திருக்கிறார்.  

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகும், தனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை என்று பிரதாப் சந்திரா போலீசில் புகார் செய்துள்ளார்.

கடந்த மே 21ஆம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக இயக்குனர் பல்ராம் பார்கவா அளித்த பேட்டியில், கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கு பிறகு உடலில் நல்ல அளவிலான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், கோவேக்சினின் 2-வது டோசுக்கு பிறகு மட்டுமே போதுமான நோய் எதிர்ப்பு சக்திகள் தூண்டப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, மே 25ஆம் தேதி, தனியார் ஆய்வகத்துக்கு சென்று நான் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு தடுப்பூசி செலுத்திய பிறகும் நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாகவில்லை என்று அறிக்கை வந்தது. ரத்த தட்டணுக்கள் 3 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக குறைந்து விட்டது. தடுப்பூசி என்ற பெயரில் நான் மோசம் செய்யப்பட்டுள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com