ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சேர்ந்த பண்டு என்கிற ரவுடி விதிமுறைகளை மீறி தனது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சேர்ந்த பண்டு என்கிற ரவுடி விதிமுறைகளை மீறி தனது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினார். அப்போது போதை முற்றிபோக தனது சக நண்பனையே கட்டையால் சரமாரியாக தாக்கினார். அதன்பின் பண்டுவுடன் இருந்தவர்களும் நண்பரை தாக்கவே தன்னை விட்டுவிடும்படி அவர் கெஞ்சினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பண்டுவிற்கும், மற்றொரு தரப்பிற்கும் நடந்த மிகப்பெரிய மோதலில் சந்தீப் என்பவரை பண்டு கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், சக நண்பனையே கட்டையால் தாக்கி கொடூரமாக நடந்துகொண்டே இந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட்டமாக இணைந்து பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.