பிறந்த குழந்தைகளையும் விட்டு வைக்காத கொரோனா: மேலும் ஒரு பிறந்த குழந்தைக்கு கொரோனா

பிறந்த குழந்தைகளையும் விட்டு வைக்காத கொரோனா: மேலும் ஒரு பிறந்த குழந்தைக்கு கொரோனா
பிறந்த குழந்தைகளையும் விட்டு வைக்காத கொரோனா: மேலும் ஒரு பிறந்த குழந்தைக்கு கொரோனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. ஆனாலும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், பால்ஹரில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஸ்வினி கேட் என்ற பெண்ணுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஆனால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை கர்ப்பிணி பெண்களை கொரோனா அதிகம் தாக்கி வந்த நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் தொற்று பரவுவது அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா பாதித்த குழந்தையை தனி பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நாட்டில் முதல்முறையாக கடந்த 29ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

திருவனந்தபுரத்தில் நேற்று ஓரிரு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தது தெரியவந்தது. தற்போது அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com