5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரஜினி பட நடிகை!

5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரஜினி பட நடிகை!
5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரஜினி பட நடிகை!

5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியின் முன்னணி நடிகை ஜூஹி சர்வலா. இவர் தமிழில் 1991-ல் ரஜினி நடித்த நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 
இதையடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி படங்களில் நடித்தார். மேலும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரித்த தி ஹண்ட்ரட் பூட் ஜர்னி படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். ஆனால் அதிகம் நடித்தது இந்தி படங்களில்தான். 
இந்த நிலையில், 4ஜி அலைக்கற்றையைவிட 5ஜி அலைக்கற்றையின் கதிர்வீச்சு 100 மடங்கு அதிகம், அதனால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே 5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அவர் தனது மனுவில் பல முக்கிய நிகழ்வுகளை இணைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com