சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை பரப்பப்படுவது தொடர்பான வழக்கை ஆணையம் விசாரித்து வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை பரப்பப்படுவது தொடர்பான வழக்கை ஆணையம் விசாரித்து வருகிறது.
கடந்த ஆண்டு இதுதொடர்பாகப் பதிலளிக்க சமூக வலைதளங்களுக்கும் கூகுள் போன்ற வலைதளங்களுக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் இந்தியாவிடம் விசாரணை செய்தபோது, குழந்தைகள் தொடர்பாக ட்விட்டரில் பகிரப்படும் அனைத்திற்கும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ட்விட்டர் நிறுவனமே பொறுப்பு என்று கூறியிருக்கிறது. இதை நம்பிய ஆணையம் மேற்கொண்டு விசாரணையை அமெரிக்க ட்விட்டரிடம் நடத்த முடிவெடுத்துள்ளது.
ஆனால் அதற்குப் பிறகு தான் தெரியவந்திருக்கிறது. ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் 10 ஆயிரம் பங்குகளில் 9 ஆயிரத்து 999 பங்குகளை அந்நிறுவனமே வைத்துள்ளது.
அதேபோல இந்திய போக்சோ விதிகளை ட்விட்டர் இந்தியா தான் மீறியிருக்கிறது. வேண்டுமென்றே ட்விட்டர் இந்தியா தங்களிடம் பொய் சொல்லிவிட்டது என ஆணையம் கொந்தளித்திருக்கிறது.
இதன் எதிரொலியாகவே ட்விட்டர் இந்தியா மீது வழக்கு பதிய சொல்லியிருக்கிறது. குழந்தைகள் மீது இச்சை கொள்ளும் காமுகர் உலாவும் தளமாக ட்விட்டர் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும்.
ஆகையால் ட்விட்டர் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தான் என்று நிரூபிக்கும் வரை அவர்கள் பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.