நாசா செல்ல இருந்தவரை தடுத்து நிறுத்திய விமான ஊழியர்கள்: இழப்பீடு கேட்டு கோர்ட் வரை சென்ற இளைஞர்

நாசா செல்ல இருந்தவரை தடுத்து நிறுத்திய விமான ஊழியர்கள்: இழப்பீடு கேட்டு கோர்ட் வரை சென்ற இளைஞர்
நாசா செல்ல இருந்தவரை தடுத்து நிறுத்திய விமான ஊழியர்கள்: இழப்பீடு கேட்டு கோர்ட் வரை சென்ற இளைஞர்

இளைஞர் ஒருவர் நாசா பயணத்தை தவறவிட்டதால் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள

பெங்களூரூவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாசா பயணத்தை தவறவிட்டதால் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த விமான நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 10,2019 அன்று, பெங்களூரூவில் வசிக்கும் கெவின் மார்ட்டின் என்ற இளைஞர் இண்டிகோ விமானத்தில் டெல்லி செல்ல காலை 6.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தார்.

ஆனால் இண்டிகோ ஊழியர்கள் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துவிட்டனர், அவர் விமானத்திற்கான உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்திருந்த போதிலும், விமானம் அதிகப்படியான பயணிகளை கொண்டுள்ளதாக கூறி அவரை அனுமதிக்கவில்லை. அத்துடன் அவர்கள் அவரை மற்றொரு விமானம் மூலம் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால் அது காலதாமதமாகிவிடும். 

கெவின் மார்ட்டின் கர்நாடகாவில் 2019ம் ஆண்டிற்கான ஜே.இ.இ. தேர்வில் முதலிடம் பெற்றவர். இவர் ஐ.ஐ.டி குவஹாத்தியின் டெக்னோத்லானில் வெற்றி பெற்று நாசா செல்லும் வாய்ப்பை கைப்பற்றினார், டெல்லியில் இருந்து மற்றொரு விமானத்தின் மூலம் அவர் அமெரிக்க செல்லவிருந்தார். ஆனால் விமான சிக்கல் காரணமாக அவர ஆசை சுக்குநூறாக உடைந்தது.

இதனை தொடர்ந்து இது தொடர்பாக மார்ட்டின் 2019 டிசம்பரில் நுகர்வோர் நீதிமன்றத்தை அனுகினார். அதன்படி கடந்த 2021 ஏப்ரல் 3 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில், இண்டிகோ நிறுவனம் அவருக்கு ரூ .1 லட்சம் இழப்பீடாகவும், மன வேதனையை ஏற்படுத்தியதற்காக ரூ.50 ஆயிரம் ஆபராத தொகை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அத்துடன் விமான நிறுவனம் தனது வழக்குக்கு ரூ .10,000 மற்றும் டிக்கெட் தொகையை வட்டியுடன் ரூ.8,605 செலுத்துமாறும் கூறப்பட்டது.

இதன்மூலம் அவ்விமான நிறுவனம் ரூ .1.6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com