தேசியம்
தடுப்பூசி போட்டவுடன் சான்றிதழை அன்றைய தினமே வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
தடுப்பூசி போட்டவுடன் சான்றிதழை அன்றைய தினமே வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நாள் அல்லது நேரத்தை மாற்றி அமைக்க, தேர்ந்தெடுக்க கோவின் செயலியில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் அண்மையில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயனாளர்களுக்கான சான்றிதழை அன்றைய தினமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் கோவின் செயலி நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை முறைப்படுத்துவதற்கானதாகும். உறுதி செய்யப்பட்ட நேரத்தில் பயனாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்காவிட்டால் இந்த செயலி மூலம் கண்டறிய முடியும்.
மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசிகளின் இருப்பையும் பொறுத்து அவற்றை செலுத்திகொள்வதற்கான குறித்த நேரத்தையும் இந்த செயலியில் வெளியிட வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நாள் அல்லது நேரத்தை மாற்றி அமைக்க, தேர்ந்தெடுக்க கோவின் செயலியில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.