உ.பி.யில் கொரோனாவை ஒழிக்க ருத்ராபிஷேக பூஜை செய்த முதல்வர் யோகி..!

உ.பி.யில் கொரோனாவை ஒழிக்க ருத்ராபிஷேக பூஜை செய்த முதல்வர் யோகி..!

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேக பூஜையில் ஈடுபட்டார்.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை மிக தீவிரமாகி, தற்போது மூன்றாம் அலை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கொரோனாவின் இரண்டாவது அலையில் மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று. காசியாபாத், நொய்டா, லக்னோ, மீரட் உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்ய வசதியின்றி சாலையிலும், பொதுவெளிகளிலும் உடல்களை எரிக்கும் அவலம் நடந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ருத்ராபிஷேக பூஜையில் ஈடுபட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சிவாலயம் ஒன்றில் வழிபாடு நடத்திய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிவலிங்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ருத்ராபிஷேகம் பூஜை எனப்படும் சிவலிங்கத்திற்கு பால் ஊற்றி வணங்கும் சிறப்பு பூஜையை மேற்கொண்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்