கொரோனா 2-ம் அலை இளைஞர்களை அதிகம் தாக்குவது ஏன்?

கொரோனா 2-ம் அலை இளைஞர்களை அதிகம் தாக்குவது ஏன்?

கொரோனா 2-ம் அலை இளைஞர்களை ஏன் அதிகம் தாக்குகிறது என்ற காரணங்களை ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா விளக்கியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை மிக தீவிரமாகி, தற்போது மூன்றாம் அலை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   முதல் அலையில் 45-50 வயதுக்கு மேலானோருக்குத்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது அதுவும் குறிப்பாக நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இருதய நோய்கள், கிட்னி, சிறுநீர்ப்பாதை உபாதைகள் என்று நீண்ட கால நோய்கள் இருப்பவர்களிடத்தில் மரணத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகம் கொரோனாவுக்குப் பாதிப்படைகின்றனர். 

இந்நிலையில், இதற்கான காரணங்களை ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா தற்போது கூறியுள்ளார்.

இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா 2-வது அலையில் மக்கள் மிக மோசாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவப் பணியாளர்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் என அனைத்தும் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்தியாவின் நிலையைப் பார்த்து உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

2-வது அலையில் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிக அளவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கான காரணம் குறித்து ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா நேற்று நிருபர்களிடம் விளக்கினார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா 2-வது அலையில் இந்தியாவில் இளம் வயதினர் அதிக அளவில் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதற்கு முதல் காரணம், இளம் வயதினர் வைரஸ் தொற்றுக்கு அதிகமான வாய்ப்பளித்து, வெளியில் அதிகமாக நடமாடுகிறார்கள், கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறிச் செல்லும்போது பாதிக்கப்படுகிறார்கள்.

2-வதாக நாட்டில் தற்போது இருக்கும் உருமாற்ற கொரோனா வைரஸ் பரவல். இந்த உருமாற்ற கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரிப்பால் பாதிப்பும் அதிகரிக்கிறது. இதனால்தான் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

அதேநேரம், வயதான பிரிவினரும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட வாய்ப்பில் இருப்பவர்கள்தான், பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரு கொரோனா அலைகளிலும் 70 சதவீதம் நோயாளிகள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். இளம் வயதினரைவிட சற்று அதிகரித்துள்ளது” என பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்