கோழி இறைச்சிக்கு தடை! இது தான் காரணம்

கோழி இறைச்சிக்கு தடை! இது தான் காரணம்

பஞ்சாப்பின் லூதியானாவில், ராய்ப்பூரில் உள்ள கோழிப் பண்ணையில் 31,000 மேற்பட்ட பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு இருந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்  பறவைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் மே 7 ம் தேதி  ராய்ப்பூரில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து அனுப்பப்பட்ட பறவைகளும் மாதிரி பரிசோதனை செய்தது அந்த பரிசோதனையில் அந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

1,500 பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இந்த மரணம் குறித்து அதன் உரிமையாளர் தகவல்களை சேகரித்தார். இந்த செய்தி குறித்து விசாரணை நடத்திய பிறகு துணை கமிஷனர் குமார் சர்மா அந்த பண்ணையைச் சுற்றி உள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை பாதிக்கப்பட்ட மண்டலமாகவும் 10 கிலோ மீட்டர் வரை கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவித்துள்ளார்.

அந்த கோழிப் பண்ணையில் இருந்து  கோழி இறைச்சி, முட்டை தீவனம் மற்றும் வேறு எந்த பொருட்களும் எடுக்கக்கூடாது என்று கூறப்பட்ட நிலையில்  அதை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது என்பதை உறுதி செய்வதற்கு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்