மேற்குவங்கத்தை கைப்பற்றுவதே மத்திய அரசின் நோக்கம்

மேற்குவங்கத்தை கைப்பற்றுவதே மத்திய அரசின் நோக்கம்: முதல்வர் மம்தா விமர்சனம்..!

மேற்குவங்கத்தை கைப்பற்ற விரும்பியதை தவிர வேறு எந்த வேலையும் மத்திய அரசு செய்யவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி, அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். 

இந்த நிலையில், முதல் சட்டசபையில் பேசிய முதல்வர் மம்தா, கடந்த 6 மாதங்களாகவே மத்திய பாஜக அரசு தலைவர்கள் நாட்டுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. எப்படியாவது மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை நினைத்துக்கொண்டு அடிக்கடி வருகை தந்து இங்கு முகாமிட்டிருந்தனர். இருப்பினும், அவர்களால் இங்கு ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றார். 

இக்கட்டான சூழலில் மத்திய விஸ்டா திட்டத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர் இல்லம் அமைக்க சுமார் ரூ.50,000 கோடி செலவிடுகிறார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. எதற்கு ஆர்வம் காட்டுவது, எதற்கு காட்ட கூடாது என்று தெரியாமல் செயலிழந்த நிர்வாகமாக மத்திய அரசு உள்ளது என மம்தா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்