டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு..!

கட்டுக்கடங்காத கொரோனா: டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு..!

டெல்லியில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கத்தால் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில்  கடந்த  ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த டெல்லியில் மேலும் ஒருவாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஊரடங்கு மிகக்கடுமையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். 

மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படமாட்டாது எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்