’வெறும் வயிற்றில் கோமியம் குடியுங்கள்… கொரோனா சிட்டாக பறந்துவிடும்..’ – சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ!

’வெறும் வயிற்றில் கோமியம் குடியுங்கள்… கொரோனா சிட்டாக பறந்துவிடும்..’ – சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ!

கொரோனா வைரஸ் பரவல் தொற்றிலிருந்து தப்பிக்க பசு கோமியத்தை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றியில் குடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சைஅயை உருவாக்கியுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸால் நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், உ.பி.யில் உள்ள பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர சிங்,  பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் எனக் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இது தொடர்பாக எம்எல்ஏ சுரேந்திர சிங் வெளியிட்ட வீடியோவில், ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துக்கொண்டு, அதில் பசுவின் கோமியத்தை கலந்து, குடிக்கும் வகையில் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.

சுரேந்திர சிங் அந்த வீடியோவில் கூறுகையில் “பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடுத்த அரை மணிநேரத்துக்கு ஏதும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு குடித்தால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

என்னுடைய ஆரோக்கியமான உடல்நிலைக்கும் இதுதான் காரணம், மக்களுக்காக 18 மணிநேரம் என்னால் உழைக்க முடிகிறது. எந்த விதமானநோய்க்கும் பசுவின் கோமியம் மருந்தாகும், குறிப்பாக இதய நோய்களுக்கு பசுவின் கோமியம் சிறப்பாக வேலை செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்டிருந்தபோது, ஜூலை மாதத்தில், மே.வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியத்தை குடிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.44%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்